2026 மே 04, திங்கட்கிழமை

கிழக்கில் குவைத் முலீடுகளை மேற்கொள்ளும்: மாகாண அமைச்சரிடம் தூதுவர் உறுதி

Super User   / 2013 பெப்ரவரி 24 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்


கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ள இலங்கைக்கான குவைத் தூதுவர் யாகூப் வை. அல் அதீகி கிழக்கு மாகாண அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.

கிழக்கு மாகாண விவசாய மற்றும் கால்நடை உற்பத்தி அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமதிற்கும் இலங்கைக்கான குவைத் தூதுவரிற்கும் இடையிலான சந்திப்பு  அண்மையில் இடம்பெற்றது.

கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போதே தூதுவர்  மேற்கண்ட உறுதிமொழியினை வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதறகே
குவைத் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தமது அமைச்சின் கீழுள்ள விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்குரிய சாத்தியங்கள் குறித்து இதன்போது குவைத் தூதுவருக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் விளக்கமளித்தார்.

இலங்கை மற்றும் குவைத் நாடுகளுக்கிடையில் உறவுகளை மேம்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நலன் தொடர்பில் குவைத் நாடு மிக நீண்ட காலமாக நட்புடன் செயற்பட்டு வருகின்றமையினைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஹாபிஸ் நஸீர் - அதற்காக இலங்கை சார்பில் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் குவைத் தூதுவரிடம் தெரிவித்தார்.

இதன்போது, அமைச்சர் ஹாபிஸ் நஸீருக்கு குவைத் தூதுவர் யாகூப் வை. அல் அதீகி நினைவுச் சின்னமொன்றினை வழங்கி கௌரவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .