2026 மே 04, திங்கட்கிழமை

வவுணதீவு பிரதேச தேசோதய சபை பிரதேச சம்மேளன அங்கத்தவர்களுக்கான விழிப்புணர்வு வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 26 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எஸ்.வதனகுமார்


மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச தேசோதய சபை பிரதேச சம்மேளன அங்கத்தவர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு வேலைத்திட்டம் நேற்றுமுன்தினம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சர்வோதய தேசோதய சபையின் மக்கள் இயக்கத்தை உருவாக்குவதன் ஊடாக நாட்டில் நல்லாட்சியை உருவாக்கும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் பிரதேச மட்டத்தில் அரசியல் விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், வவுணதீவில் உள்ள இருட்டுச்சோலைமடு அ.த.க.பாடசாலையில் நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தில் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர். இதன்போது மெய்யறிவு, பொருளாதாரம், அதிகாரம் போன்ற தலைப்புக்களில் விரிவுரைகள் நடைபெற்றன.

சர்வோதய மட்டக்களப்பு இணைப்பாளர் ரி.மதனகுமாரின் ஏற்பாட்டில் தேசோதய சபையின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் வேதாரணியம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அருட்தந்தை நவரெட்ணம், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞா.சிறிநேசன், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட நிஸ்கோ முகாமையாளர் பி.கிருபைராசா ஆகியோர் விரிவுரையாற்றினர்.

இந் நிகழ்வில் சர்வோதய கிழக்கு மாகாண இயைப்பாளர் கரீம் மற்றும் மதத் தலைவர்கள் தேசோதய சபையின் மாவட்ட சபை முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .