2026 மே 04, திங்கட்கிழமை

ஏறாவூர் தமிழ் பிரிவு கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தை மீள கையளிக்க ஹக்கீம் உறுதி

Super User   / 2013 பெப்ரவரி 27 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

–எல்.தேவ அதிரன்

மட்டக்களப்பு ஏறாவூர் நீதிமன்ற கட்டத்தின் திருத்ததிற்காக 9 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கி உடனடியாக ஏறாவூர் 5 தமிழ் பிரிவு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தினை மக்களின் பாவனைக்குக் கையளிக்க நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் உறுதியளித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.கருணாகரம் (ஜனா) இன்று புதன்கிழமை காலை கொள்ளுப்பிட்டியிலுள்ள அமைச்சரின் இல்லத்தில் சந்தித்து உரையாடியபோதே அமைச்சர் இந்த உறுதியை வழங்கியிருக்கிறார். ஏறாவூர் - 5 தமிழ் பிரிவு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் கிராம சேவையாளர் அலுவலகம் மற்றும் சமுர்த்தி அலுவலகங்கள் இயங்கி வந்திருந்தன.

நீதிமன்றக் கட்டடம் உடைந்த நிலையில் உள்ளதனால் ஏறாவூர் நீதிமன்றம் ஏறாவூர் 5 தமிழ் பிரிவு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.

இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். அதனால் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு நீதி அமைச்சரிடம் கோரியதற்கமைய அமைச்சர் உடனடியானக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் ஜனா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .