2026 மே 04, திங்கட்கிழமை

காந்திநகர் கிராமத்தை முழுமையாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 28 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எஸ்.வதனகுமார்


மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட காந்திநகர் கிராமத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அதிகாரசபை மேற்கொண்டுவருகின்றது.

இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக காந்திநகர் கிராமத்தில் யுத்தத்தினால் சேதமடைந்த  50 வீடுகளை புனரமைப்பதற்கான உதவிகள் நேற்று புதன்கிழமை வழங்கப்பட்டன.

தெரிவுசெய்யப்பட்ட 50 குடும்பங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி என்ற அடிப்படையில், ஆரம்பக்கட்ட கொடுப்பனவாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 50,000 ரூபா வழங்கப்பட்டன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு அமைய சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அதிகாரசபையினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட  காந்திநகர் கிராமம் தெரிவுசெய்யப்பட்டது.

மேற்படி காந்திநகர் கிராமத்தில்; முழுமையான அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அதிகாரசபையின் திட்டப்பணிப்பாளர் டி.கே.ஜினதாஸ தெரிவித்தார்.
 
வவுணதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வெ.தவராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புனர்வாழ்வு அதிகாரசபையின் திட்டப்பணிப்பாளர் டி.கே.ஜினதாஸ, பிரதிப் பணிப்பாளர் எஸ்.எம்.பதூர்தீன், மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி திட்டப்பணிப்பாளர் திருமதி மனோ ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .