2026 மே 04, திங்கட்கிழமை

மட்டு. அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவராக வி.கமலதாஸ் தெரிவு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 28 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.லோஹித்


மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் புதிய தலைவராக குழந்தைகள் உதவி மற்றும் தேசிய அபிவிருத்தி அமைப்பின் தலைவர் வி.கமலதாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ வீதியில் அமைந்துள்ள இணையத்தின் காரியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்தப் பொதுக்கூட்டத்திலே இவர் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த பொதுக்கூட்டம்  தலைவர் ஏ.செல்வேந்திரன் தலைமையில் இ;;டம்பெற்றது. இதனையடுத்து நிர்வாக குழுக்கூட்டம் சமாதானத்துக்கான சர்வமத நிறுவனங்களின் அமைப்பின் தலைவர் கணேஸ் தலைமையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இணையம் அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் சுமார் 41 பேர் வரை கலந்து கொண்டனர்.

புதிய நிர்வாக சபையில் மட்டக்களப்பு, பட்டிப்பளையிலுள்ள குழந்தைகள் உதவி மற்றும் தேசிய அபிவிருத்தி அமைப்பின் தலைவர் வி.கமலதாஸ் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பான இணையத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

உபதலைவராக ஓட்டமாவடி- பெண்கள் அபிவிருத்தி நிதியத்தின் திருமதி எம்.ஹிஸ்மத் ஸபீகா, செயலாளராக போரதீவுப்பற்று புனரவாழ்வு அபிவிருத்தி அமைப்பின் இணைப்பாளர் வி.லவக்குமார், உபசெயலாளராக மட்டக்களப்பு பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் இணைப்பாளர் திருமதி எஸ்.சோமாவதி, பொருளாளராக கிரான் புவா அமைப்பின் இணைப்பாளர் எம். செல்வகுமார்,  கணக்காய்வாளராக ஆரையம்பதி மீஸ்ஸன் அமைப்பின் தலைவர் எம்.எம்.எம்.நலீம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

செடோ அமைப்பின் ரி.தயானந்தன், சீ.டி.எம். அமைப்பின் இணைப்பாளர் எஸ்.குங்கேஸ்வரி, நிர்டோ அமைப்பின் செயலாளர் பி.சச்சிதானந்தம், கே.பி.என்.டி.யு அமைப்பின் ஏம். கோமதி, டப்ளியூ.இ.டி.எப் அமைப்பின் திட்ட இணைப்பாளர் ஏஸ்.எம்.எஸ்.ரஸீதா, சேவோ அமைப்பின் தலைவர்      எஸ். திருநாவுக்கரசு ஆர்.டி.பி.ஓ. அமைப்பின் தலைவர் எஸ்.ரமேஸானந்தன், கைண்ட் காட் அமைப்பின் தலைவர் ஏஸ்.ஐ.எம்.கபீர், நெக்டோ அமைப்பின் தலைவர் எம்.செல்வரெட்ணம் சரீரம் நிறுவனத்தின் பணிப்பாளர் சிவசுந்தரம் ஆகியோர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .