2026 மே 04, திங்கட்கிழமை

யானை தாக்குதலால் வயோதிப விவசாயி பலி

Super User   / 2013 பெப்ரவரி 28 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆனைத்தீவில் இன்று வியாழக்கிழமை நண்பகல் யானை தாக்கியதில் வயோதிப விவசாயி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த 69 வயதான வடிவேல் புண்ணியமூர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிராம சேவையாளரான பி.பாலேந்திரா தெரிவித்தார்.

இந்த வயோதிபர் தனது தோட்டத்தில் எள்ளுத் தானியத்தை பயிரிட்டுக் கொண்டிருந்தபோது பரந்த வயல் வெளிகளுக்கூடாக தன்னந்தனியனாக வந்த யானை இவரைத் தாக்கி ஸ்தலத்திலேயே கொன்று விட்டுச் சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

மேற்படி யானையின் தாக்குதலுக்குள்ளான வயோதிபருக்கு கண்பார்வையும் தெளிவில்லாமல் இருந்ததினால் அவரை நெருங்கிய யானையை அவர் கண்டு கொண்டிருக்கவில்லை என்றும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர். சடலம் தற்சமயம் அவரது எள்ளுத் தோட்டப் பகுதியிலிருந்து வாழைத் தோட்டத்திலுள்ள வீட்டுக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த இருவார கால பகுதியில் கொல்லப்பட்ட இரண்டாவது நபர் இவராகும். கடந்த 16.02.2013 திகதி உப்பூறல் கிராமத்தில் 60 வயதான தங்கராசா பூமணி எனும் வயோதிப  பெண் யானையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .