2026 மே 04, திங்கட்கிழமை

சட்டவிரோத வெளிநாட்டு பயணங்களை தடுக்க விழிப்புணர்வு பயிற்சிகள்

Super User   / 2013 மார்ச் 04 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்வோரை தடுக்கும் வகையில் மட்டு. மாவட்டத்தில் கிராமந்தோறும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தளவாய்க் கிராமத்தில் இன்று திங்கட்கிழமை நடாத்தப்பட்ட விழிப்புணர்வுப் பயிற்சியில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அம்கோர், ஐ.ஓ.எம், கனடா நிதியம், கடற்றொழில் நீரியல் வளத்துறை  திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையோடு இந்த பயிற்சி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டு. மாவட்டத்தில் 52 இடங்களில் நடைபெற்ற  பாதுகாப்பான புலம்பெயர்வு பற்றிய பயிற்சியில் சுமார் 1,881 பேர் பங்குபற்றியுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .