2026 மே 04, திங்கட்கிழமை

முன்பள்ளி ஆசிரியைகளுக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் விசேட கருத்தரங்கு

Kogilavani   / 2013 மார்ச் 05 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் கலை கலாசாரக் குழுவினால் முன்பள்ளி ஆசிரியைகளுக்கும் அதன் நிர்வாகிகளுக்குமான விசேட கருத்தரங்கொன்று நேற்று சம்மேளன அஷ்ஷஹீத் அஹமட் லெப்பை ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் சம்மேளன கலை கலாசாரக் குழுவின் தலைவர் பாவலர் சாந்தி முகைதீன் தலைமையில் நடைபெற்றது.

'இஸ்லாமிய வரையறை பேணி கலை கலாசார நிகழ்வுகளை எவ்வாறு நடாத்தலாம்' 'இஸ்லாமிய நுண்கலையும் அவற்றைப் பாதுகாப்பதன் அவசியமும்' எனும் தலைப்புக்களில் இவ்விசேட கருத்தரங்கு நடைபெற்றது.

இவ்விசேட கருத்தரங்கில் பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் பிஸ்மி,  அல் குர் ஆன் பாடசாலை பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம்.பிர்தௌஸ்(நளீமி) ஆகியோர் விரிவுரைகளை நடத்தினர். 

இக்கருத்தரங்கில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல் அப்துல் ஜவாத், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் அப்துல் காதர்(பலாஹி), காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.சுபைர் காத்தான்குடி லஜ்னதுஸ் ஸுன்னா அமைப்பின் தலைவர் அஷ்.ஷெய்க் எம்.சி.ஆறிழ்வான்(மதனி), சம்மேளன உபசெயலாளர் ஏ.எம்.சாதிக்கீன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .