2026 மே 04, திங்கட்கிழமை

ரயிலில் மோதி ஒருவர் பலி

Super User   / 2013 மார்ச் 06 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு, மாமங்கம் - புன்னச்சோலை எனும் இடத்தை சேர்ந்த 29 வயதான வேலாயுதம் பெணடிக் யேசு என்பவரே புகையிரதத்தில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.

புகையிரத தண்டவாளத்தில் மேற்படி நபர் விழுந்து அடிபட்டு ஸ்த்தளத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .