2026 மே 04, திங்கட்கிழமை

அமிலம் பருகிய வயோதிபர் மரணம்

Menaka Mookandi   / 2013 மார்ச் 07 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

நச்சு அமிலத் திரவகமொன்றை தவறுதலாகப் பருகிய 77 வயதுடைய வயோதிபர் ஒருவர் மரணமான சம்பவமொன்று ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சந்திவெளியில் உள்ள பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரொருவரின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். குமாரகே டொன் ஜெயசேகர என்பவரே இவ்வாறு மரணமாணவராவார்.

வலி நோவு நிவாரணியாகப் பாவிக்கும் ஒருவகைத் திரவகத்தையே இவர் தவறுதலாகப் பருகியுள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .