2026 மே 04, திங்கட்கிழமை

'பெண்களின் விழிப்பே சமூகத்தின் எழுச்சி' ஊர்வலம்

Kogilavani   / 2013 மார்ச் 09 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


'பெண்களின் விழிப்பே சமூகத்தின் எழுச்சி' எனும் தலைப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் நேற்று மாலை ஊர்வலமொன்று நடத்தப்பட்டது.

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் பெருமளவிளானோர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு நகரிலுள்ள மணிக்கூட்டுக்கோபுரத்தடியில் ஆரம்பமான இவ் ஊர்வலம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை அலுவலகம்வரை சென்றது.

இவ் ஊர்வலத்தில் கலந்துகொண்ட பெண்கள் மெழுகுவர்த்திகளை ஏந்திய வண்ணம் கலந்துகொண்டனர்.

இந்த ஊர்வத்தில் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளருமான பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஜோர்ஜ்பிள்ளை உட்பட அக் கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ஊர்வலத்தின் முடிவில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையலுவலகத்தில் மகளீர் ஒன்று கூடலொன்றும் நடைபெற்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .