2026 மே 04, திங்கட்கிழமை

மண்முனை வடக்கு இளைஞர் கழக சம்மேளனத்தின் நிருவாக தெரிவு

Kanagaraj   / 2013 மார்ச் 09 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மண்முனை வடக்கு இளைஞர் கழக சம்மேளனத்தின் நிருவாக தெரிவு மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

இரண்டாவது இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான தேர்தல் மே மாதத்தின் முதல் வாரத்தில் இடம்பெறவுள்ள நிலையில் அவசரமாக இந்தப் புதிய நிருவாகத்துக்கான தெரிவுகள் நடைபெற்றன.

இதன் போது, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்கிரிதரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் திருமதி கலாவதி, மண்முனை வடக்கு இளைஞர் சேவை அதிகாரி நா.குகேந்திரா, முதலாவது இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.மதன் உள்ளிடோர் முன்நிலையில் புதிய நிருவாகத்துக்கான உறுப்பினர்கள் தெரிவு நடைபெற்றது.

மண்முனை வடக்கின் அனைத்து கிராம சேவையாளர் பிரிவிலுந்தும் இளைஞர் கழகங்கள் விளையாட்டுக் கழகங்களிலிருந்தும் உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.

உத்தியோகபூர்வ செயலாளராக இளைஞர் சேவை அதிகரி நா.குகேந்திரா இருக்க  புதிய தலைவராக எஸ்.குகதாஸ், பொருளாளராக ரஜீந்திரா ஆகியோருடன் நிறைவேற்றுச் சபை தெரிவு செய்யப்பட்டதுடன், அலுவலகப்பிரிவு செயலாளர்கள் 8பேர், கணக்காய்வுப் பரிசோதகர், ஒழுக்காற்றுக் குழு 5 பேர் மற்றும் ஆலோசனைக் குழுவில்  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்கிரிதரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் திருமதி கலாவதி அடங்கலாக 5 பேரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இப் புதிய நிருவாக சபையின் செயற்பாடுகள் அடுத்த வருடத்துக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது, 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .