2026 மே 04, திங்கட்கிழமை

மட்டு. மாநகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்களை அரச அதிபர் தலைமையிலான குழுவினர் பார்வை

Suganthini Ratnam   / 2013 மார்ச் 10 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்டுவரும் தேசத்திற்கு மகுடம் (தயட்ட கிருள) திட்டத்தின் கீழ், மாநகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்களை அந்த மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.

இந்த வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக   திணைக்களத் தலைவர்களுடன் மாவட்ட செயலகத்தில் நேற்று சனிக்கிழமை சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதனை அடுத்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையிலான குழுவினர் இந்த வேலைத்திட்டங்களை  பார்வையிட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மட்டக்களப்பு மாநகர பிரதி மேயர் ஜோர்ச்பிள்ளை, வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர் மஹிந்தன், கட்டங்கள் திணைக்கள பொறியியலாளர் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.

இந்த மாத இறுதி வாரத்தில் அம்பாறையில் நடைபெறவுள்ள தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல மில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதில் ஒரு பகுதியாகவும் முக்கியமானதாகவும் உள்ள மட்டக்களப்பு மாநகரை அழகுபடுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ்;; நீதிமன்றத்தின் அருகில் உள்ள முதியோர் பூங்கா, காந்திப் பூங்கா, இருதயபுரம் சந்திக்கு அருகில் உள்ள லீனியர் பார்க் ஆகியன அபிவிருத்தி செய்யப்பட்டுவருவதுடன்,  திருமலை வீதிக்கான  வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட அபிவிருத்தி வேலைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.  இந்த வேலைத்திட்டங்களையே மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.

மட்டக்களப்பு நகர அழகுபடுத்தல் திட்டத்தின் கீழ், நகரின் மத்தியில் உள்ள காந்தி சதுக்கம் காந்தி பூங்காவாக மாற்றம் பெறுகிறது.

தேசத்தின் மகுடம் (தயட்ட கிருள) வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த வேலைத்திட்டங்களுக்காக 38.301 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டங்களை மட்டக்களப்பு மாநகர சபையும் நகர அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து மேற்கொண்டுவருகின்றன.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .