2026 மே 04, திங்கட்கிழமை

பாலமுனை கிராமத்தில் வீதி அபிவிருத்திப்பணிகள்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 10 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள பாலமுனை கிராமத்தில் வீதி அபிவிருத்திப் பணிகளை பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்து வைத்துள்ளார்.

தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ், பாலமுனை பிரதேசத்தில் உள்ள 6 வீதிகளுக்கான அபிவிருத்திப் பணிகளையே பிரதி அமைச்சர் நேற்று சனிக்கிழமை ஆரம்பித்துவைத்தார்.

இந்த 6 வீதிகளும் கொங்கிறீட் வீதிகளாகவும் பொருத்துக்கல் வீதிகளாகவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், ஆரையம்பதி பிரதேசசபைத் தவிசாளர் கிறிஸ்டினா சசிகரன், பிரதேசசபை உறுப்பினர் ஏ.முபாறக், ஆரையம்பதி பிரதேசசபையின் செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .