2026 மே 04, திங்கட்கிழமை

மாடு அறுத்த குற்றச்சாட்டில் கைதானவர் பிணையில் விடுதலை

Kogilavani   / 2013 மார்ச் 10 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ். நூர்தீன்

புதிய காத்தான்குடியில் மாடு அறுத்த குற்றச்சாட்டில் கைதான நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

புதிய காத்தான்குடி பிரதேசத்தில் காலை 6 மணிக்கு முன்பு மாடு அறுத்த குற்றச்சாட்டில் வியாபாரி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு நீதமின்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்த மாட்டு இறைச்சியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட இறைச்சி மனித பாவனைக்கு உகந்தது என காத்தான்குடி பொது சுகாதார பரிசோதகர்கள் வழங்கிய அறிக்கையை அடுத்து இறைச்சியை குறித்த நபரிடமே வழங்குமாறு  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார்.

இதேவேளை, மேற்படி வியாபாரி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்  இவ்வழக்கு தொடர்பிலான விசாரணையை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் காலை 6 மணிக்கு முன்பாக மாடு அறுக்கும் செயற்பாட்டில் ஈடுபடக் கூடாது என காத்தான்குடி பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .