2026 மே 04, திங்கட்கிழமை

தமிழ் மக்களுக்கு சமாதான நீதவான்களின் தேவைகள் அதிகம்: பிரதி அமைச்சர் முரளிதன்

Super User   / 2013 மார்ச் 10 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


யுத்த பாதிப்புக்களிலிருந்து மீண்டு வரும் தமிழ் மக்களுக்கு சமாதான நீதவான்களின் தேவைகள் அதிகமாக காணப்படுகின்றன என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளிலுள்ள மக்களின் சட்பூர்வமான தேவைகளை நிவர்த்திக்கும் வகையில் இந்த சமாதான நீதவான் நியமனங்கள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

சமாதான நீதவான்கள் என்பவர்கள் சமூகத்தில் மதிப்புமிக்கவர்களுக்கும் சமூக ஈடுபாடு கொண்டவர்களுக்கே வழங்கப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.

உண்மையில் எமது தமிழ் பிரதேசங்களை பொறுத்தவரையில் சட்டபூர்வ பிரச்சினைகள் பலவற்றினை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு பயன்படும் வகையில் சமாதான நீதவான்கள் செயற்பட வேண்டும் எனவும்  பிரதி அமைச்சர் முரளிதன் மேலும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்த்தில் சமாதான நீதவான் நியமனங்கள் பெற்ற ஒரு தொகுதியினருக்கு நியமனங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதனினால் இதன்போது நியமனங்க கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்விலேயே அவர் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

இந்த நிமயனம் வழங்கும் நிகழ்வில் மீள்குடியேற்ற அதிகார சபையின் பணிப்பாளர் கே.சத்தியவாரதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .