2026 மே 04, திங்கட்கிழமை

'ஜும் ஆ பிரசங்கங்களை வலுவுள்ளதாக அமைத்துக்கொள்ள வேண்டும்'

Kogilavani   / 2013 மார்ச் 11 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


சமூகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஏற்றவகையில் ஜும் ஆ பிரசங்கங்களை வலுவுள்ளதாக அமைத்துக்கொள்ள வேண்டுமென காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் வருடாந்த மாநாட்டின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 15ஆவது வருடாந்த மாநாடு புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.

'சமூக மேம்பாட்டுக்காக உலமாக்களின் பங்களிப்பு' எனும் தலைப்பில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஏ.எல்.ஆதம்லெவ்வை தலைமையில் இம்மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.முஸ்த்தபா மற்றும் இதன் உப தலைவர் மௌலவி எஸ்.எச்.எம்.ஸாஜஹான், காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும் ஆ பள்ளிவாயலின் பேஷ் இமாம் மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் பாலஹி உட்பட அதன் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் இதில் அங்கத்துவம் வகிக்கும் காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு, காங்கேயனோடை, பாலமுனை, பூநொச்சிமுனை, சிகரம், ஒள்ளிக்குளம், கீ;ச்சான்பள்ளம், மண்முனை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பள்ளிவாயல்களின் கதீப்மார் கலந்துகொண்டனர்.

'இதில் சமகால குத்பாக்கள் அமைய வேண்டிய ஒழுங்குகளும் இமாம்களின் முன்மாதிரியும்' எனும் தலைப்பில் தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதியும் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவருமான மௌலவி ஏ.பி.எம்.அலியார் றியாழியின் விரிவுரையும் இடம்பெற்றது.

இந்த மாநாட்டின் இறுதியில் 'சமூகம் எதிர் கொள்ளும் சவால்களுக்கு ஏற்றவகையில் ஜும் ஆ பிரசங்கங்களை வலுவுள்ளதாக இமாம்கள் கதீப்மார் அமைத்துக்கொள்ள வேண்டும்', 'கால சூழ்நிலைகளுக்கேற்ப ஜும் ஆ பிரசங்கம் இடம்பெறவேண்டும்', '45 நிமிடங்களுக்குள் ஜும் ஆ பிரசங்கம் முடிவடைய வேண்டும்', 'பள்ளிவாயல்களில் கடமையாற்றும் இமாம்கள் மற்றும் கதீப்மார்களுக்கு 25000 ரூபாவுக்கு குறைவில்லாமல் மாந்த சம்பளம் பள்ளிவாயல் நிர்வாகிகளினால் வழங்கப்படல் வேண்டும்', 'இமாம்கள் கதீப்மார்களுக்கு மாதர்ந்தம் 4 நாட்கள் விடுமறை சம்பளத்துடன் வழங்கப்படல் வேண்டும்' போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .