2026 மே 04, திங்கட்கிழமை

குடும்ப தலைவிகளுக்கு சுயதொழில் திட்டங்கள்

Kogilavani   / 2013 மார்ச் 11 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு சுயதொழில் திட்டங்கள் அறிமுகப்படுத்தியுள்ளதாக சுவிஸ்ட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் செயலாளர் தெரிவித்தார்.

குடும்பத்தை தலைமை தாங்கும் பெண்களின் மாதாந்த வருமானத்தை அதிகரித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கில்; இத்திட்டம் சுவிஸ்ட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதல் அமுல்படுத்தப்படும் இத்திட்டத்தில் மாதம் ஒரு குடும்ப தலைவிகளுக்கு சுயதொழில் உதவிகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் முறக்கொட்டான்சேனை, வாழைச்சேனை, வாகரை, ஊறியன்கட்டு, மியான்குளம் போன்ற பிரதேசங்களில் சிற்றுண்டிச்சாலை, சில்லறைக்கடை, ஆடு வளர்ப்புத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, அங்கவீனர்களை சமுகத்துடன் இணைக்கும் திட்டத்தின் கீழ் கரடியனாற்றுப் பிரதேசத்தில் குடும்பம் ஒன்றுக்கு சில்லறைக்கடையொன்று அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

முனைப்பு நிறுவனம் கடந்த 2010 முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்த புலமைப்பரிசில் திட்டத்தினை அமுல்படுத்திவருவதுடன், பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கும் மாதாந்த கொடுப்பனவுகளை வழங்கிவருவதாக அமைப்பின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .