2026 மே 04, திங்கட்கிழமை

சமையல் பாத்திரங்கள் கையளிப்பு

Kogilavani   / 2013 மார்ச் 15 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு சமையல் பாத்திரங்கள் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் நேற்று வழங்கப்பட்டன.

அனர்த்தங்களின்போது இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களுக்கு வரும் மக்களுக்கு உணவுகளை சமைத்து வழங்குவதற்காகவே இப்பாத்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இந்த சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இந்த சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

சட்டிகள், பானை, அடுப்பு, கேஸ் சிலின்டர் என்பன இதன்போது வழங்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .