2026 மே 04, திங்கட்கிழமை

பொது பல சேன ஒரு கோழைத்தனமான இயக்கமாகும்: எம்.எஸ்.சுபைர்

Super User   / 2013 மார்ச் 17 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


பொது பல சேன ஒரு கோழைத்தனமான இயக்கமாகும் என கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

"இலங்கையில் அப்பாவிகளான முஸ்லிம்கள் மீது பொது பல சேன எனும் அமைப்பினால் அடாவடித்தனங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. அப்பாவிகள் மீது அடாவடித்தனங்கள் செய்பவர்கள் கோழைத்தளமானவர்கள் என்றே கூற வேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.

ஏறாவூரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மஸுறா அமைப்பின் பரிசளிப்பு விழாவில் உரையாற்றும் போதே கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"முஸ்லிம்கள் சமாதானத்தையும் இன ஐக்கியத்தையும் நேசித்து சமூக ஒற்றுமையை வளர்த்து வரும் நிலையில் அப்பாவிகளான முஸ்லிம்கள் மீது காடைத்தனம் புரிவது கோழைத்தனமான செயலாகும். முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அநீதியும் அராஜகமும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. முஸ்லிம் சமூகத்தின் பொருளதாரத்தை திட்டமிட்டு நசுக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்த கால கட்டத்தில் பொறுமையை நாம் கடைப்பிடிக்க வேண்டும். இந்த நாட்டில் இன முறுகலை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இனக் கலவரம் ஒன்று வந்துவிடாமல் நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். ஹுதைபிய்யா உடன் படிக்கையை பற்றி நாம் அறிந்திருக்கின்றோம். அந்த உடன் படிக்கை முஸ்லிம்களுக்கு முதல் பாதகமாகவும் பின்னர் சாதகமாகவும் மாறியது.

முஸ்லிம் அரசியல்வாதிகள் எதுவும் செய்யவில்லை என்ற ஒரு விமர்சனம் நம்மிடையே இருக்கின்றது. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எதுவும் கூறாமல் கை கட்டி பார்த்துக் கொண்டிருக்கவில்லை. மிகவும் கவனமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆராக்கியமான நடவடிக்கைகளை உணர்ச்சி வசப்படாமல் எடுத்து வருகின்றனர்.

நமது சமூகத்திற்குள் இருக்கின்ற அனைவரும் ஒற்றுமைப்பட்டு தற்போது ஏற்பட்டுள்ள சவாலை எதிர்கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களை இந்த நாட்டு அரசாங்கம் கைவிடாது என்ற ஒரு பாரிய நம்பிக்கையும் முஸ்லிம்களுக்குண்டு" என்றார்.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் மற்றும் ஏறாவூர் நகர சபை தலைவர் அலிஸாஹீர் மௌலானா உட்பட் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0

  • Kanavaan Sunday, 17 March 2013 07:57 AM

    ஏமாற்றாதே! ஏமாறாதே!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .