2026 மே 04, திங்கட்கிழமை

மட்டு.கல்லடியில் இரு சடலங்கள் மீட்பு

Kogilavani   / 2013 மார்ச் 18 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜவ்பர்கான்

மட்டு.கல்லடி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கணவன், மனைவி ஆகிய இருவரின் சடலங்களே இவ்வாறு இன்று  மீட்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்திற்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்தே குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இச்சடலங்கள் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .