2026 மே 04, திங்கட்கிழமை

ஸகாத் உதவிகள் வழங்கல்

Super User   / 2013 மார்ச் 25 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கூட்டு ஸகாத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்கான ஸகாத் உதவிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தின்  கூட்டு ஸகாத் திட்டத்தின் சூறா சபை தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய கற்கைகளுக்கான பீடாதிபதியுமான மௌலவி ஏ.எம்.அலியர் றியாதி தலைமையில் சம்மேளன மண்டபத்தில் இந்த ஸகாத் உதவி வழங்கும் வைபவம் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் சம்மேளன பிரதி தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் மற்றும் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி உட்பட உலமாக்கள, சம்மேளன பிரமுகர்கள், சம்மேளன கூட்டு ஸக்காத் திட்டத்தின் குழு உறுப்பினர்கள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது தலா ஒரு பயனாளிக்கு பத்தாயிரம் ரூபா வீதம் 28 பயனாளிகளுக்கு வாழ்வதார கொடுப்பனவும்,  கடன் நிவாரணமாக 21 பேருக்கு தலா 15,000 ரூபா வீதமும் தொழில்களுக்கான உதவியாக 18 பேருக்கு பொருட்களாகவும் 28 பேருக்கு பணமாகவும் வழங்கப்பட்டன.

இதில் துவிச்சக்கர வண்டிகள், மற்றும் மா அரைக்கும் இயந்திரம், தையல் இயந்திரம் என்பனவும் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு சம்மேளனத்தின் கூட்ட ஸக்காத் திட்டத்தின் கீழ் இந்த உதவிகள் தவிர 122 குடும்பங்களுக்கு வீடுகள் திருத்திக் கொடுக்கப்படுவதுடன் மலசல கூடங்களும் அமைத்துக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .