2026 மே 04, திங்கட்கிழமை

ஈரான் தூதுக்குழு காத்தான்குடிக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 27 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரி.எல்.ஜவ்பர்கான்


இலங்கைக்கான முன்னாள் ஈரான் நாட்டு தூதுவர் அலா மோர்த்தி தலைமையிலான ஈரானிய தூதுக்குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்துள்ளனர்.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் காத்தான்குடி குட்வின் சந்தியில் நிர்மாணிக்கப்படுகின்ற குர்ஆன் சதுக்க கோபுரத்தின் நிர்மாணப் பணிகளின் வடிவமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்தக் குழுவினர் விஜயம் செய்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

ஈரான் நாட்டு பொறியியலாளர்கள், கட்டிடக் கலைஞர்களும் இந்தக் குழுவில் அடங்கியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .