2026 மே 04, திங்கட்கிழமை

'ஒன்றிணைந்து தீர்வினைத் தேடுவோம்'

Menaka Mookandi   / 2013 மார்ச் 27 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட சர்வோதய நிறுவனத்தினால் 'ஒன்றிணைந்து தீர்வினைத் தேடுவோம்' எனும் செயற்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவை ஒன்று மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

சர்வோதய நீதிச்சேவை இயக்கத்தினால் நடைமுறைப்படுதிய மேற்படி நடமாடும் நீதிச்சேவைகள் வழங்கும் நிகழ்வு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் வெ.தவராஜா அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட நீதிச் சேவை இணைப்பாளர் வி.கமலேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதில் சர்வோதய மாவட்ட இணைப்பாளர் எம்.மதனகுமார், மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரதி திட்டமிடற் பணிப்பாளர் எஸ்.சிவலிங்கம் மற்றும் சர்வோதய உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலீஸ் உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
 
இதன்போது, காலங்கடந்த திருமணப் பதிவு வைத்தல், பிறப்புப்பதிவு வைத்தல் மற்றும் பிறப்புப்பதிவு பெறல், தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல் போன்றவற்றுக்காக 150 பேருக்கு மேற்பட்டோர் சேவையினைப் பெற்றுக்கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .