2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் உலக நீர் தினம் அனுஷ்டிப்பு

Super User   / 2013 மார்ச் 27 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை உலக நீர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு தேசியக் கல்வி கல்லூரியில் உலக நீர் தினத்தையொட்டிய விழிப்புணர்வு விஷேட வைபவமொன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.பாக்கியராஜா தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் நீர் சுத்திகரிப்பு நிலைய பொறியியலாளர் சுதாகர் பாலச்சந்திரன் மற்றும் கல்லூரியின் உப பீடாதிபதிகளான ரி.யூவனேஸ்வரி, கே.துரைராஜசிங்கம், எம்.சி.ஜுனைட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நீர் தொடர்பான நாடகமொன்று நடைபெற்றதுடன் தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் நீர் சுத்திகரிப்பு நிலைய பொறியியலாளர் சுதாகர் பாலச்சந்திரனின் விஷேட உரையும் இடம்பெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .