2026 மே 04, திங்கட்கிழமை

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் இளைஞர் கைது

Suganthini Ratnam   / 2013 மார்ச் 28 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு, திருப்பெருந்துறை பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாகக் கூறப்படும்  22 வயது இளைஞரொருவரை பொலிஸார் நேற்று புதன்கிழமை கைதுசெய்துள்ளனர்.

திருப்பெருந்துறை முருகன் ஆலய உற்சவத்திற்கு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு வந்திருந்த இச்சிறுமியை அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு இவ்விளைஞர் அழைத்துச்சென்று துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .