2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் ஜனாதிபதியின் பதாகைகள் சேதம்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 28 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு நகரில் இரு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த ஜனாதிபதியின் பதாகைகள் நேற்று புதன்கிழமை  சேதமாக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய கல்லடிப் பாலத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு அரசடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்புபீடச் சந்திக்கு அருகிலும் கல்லடிப்பாலத்திற்கு முன்னாலும் பொருத்தப்பட்டிருந்த பதாகைளே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின்; பல பகுதிகளிலும் ஜனாதிபதியின் பதாகைகள் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றில் இரு பதாகைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .