2026 மே 04, திங்கட்கிழமை

ரீ.எம்.வி.பி.யின் தேசிய அமைப்பாளராக தவவேந்திரராஜா நியமனம்

Menaka Mookandi   / 2013 மார்ச் 28 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளராக பங்சலிங்கம் தவவேந்திரராஜா நியமிக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

'ஒழுக்காற்று நடவடிக்கையின் பேரில் நீக்கப்பட்ட கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்ட்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜாவுக்குப் பதிலாகவே ப.தவவேந்திரராஜா, கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்' என அவர் குறிப்பிட்டார்.

20013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளுக்கான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் புதிய நிருவாகிகளை தெரிவு செய்வதற்கான கூட்டத்தின் போதே புதிய அமைப்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் போது, கட்சியின் பிரதி செயலாளராக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை தெரிவு செய்யப்பட்டார் என பிரசாந்தன் மேலும் தெரிவித்தார்.

இந்த நிருவாக கூட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கலைக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகரசபை உட்பட 9 உள்ளுராட்சிமன்றங்களுக்கும் புதிய முகங்களை தேர்தலில் இறக்குவது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .