2026 மே 04, திங்கட்கிழமை

ரணில் மட்டு. விஜயம்

Super User   / 2013 மார்ச் 28 , பி.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை சனிக்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் மாதாந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே அவர் அங்கு செல்லவுள்ளார்.

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ கட்டிடத்தில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் மாதாந்த பொதுக் கூட்டம் அமைப்பின் தலைவர் வி கமலதாஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இக்கூட்டத்தில் இணையம் அமைப்பின் எதிர்கால திட்டங்கள்இ நிதி நடவடிக்கைகள் என்பன பற்றியும் ஆராயப்படவுள்ளதாக அவர் கூறினார். அத்துடன் அங்கத்துவ கட்டணம் செலுத்தும் அங்கத்துவர்கள் மாத்திரமே இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும் எனவும் கமலதாஸ் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .