2026 மே 04, திங்கட்கிழமை

கடலில் நீராடிய நால்வர் பலி

Suganthini Ratnam   / 2013 மார்ச் 31 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன், அப்துல் லத்தீப், ரீ.எல்.ஜௌபர் கான், தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நாவலடி கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி காணாமல் போன 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பதுளையிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த 9 பேர் மட்டக்களப்பு நாவலடி கடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் வேளையில் குளித்துக்கொண்டிருந்தனர். இதன்போது 4 பேர் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் முதலில் 3 பேரின் சடலங்கள்  மீட்கப்பட்டுள்ளன.

பின்னர் மற்றுமொருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன தெரிவித்தார்.
 
பதுளையைச் சேர்ந்த ஆசிரியரான கந்தசாமி பிரதாபன் (வயது 40), மாணவர்களான போல்ராஜ் போல்சான் (வயது 17), பாலசுப்ரமணியம் அபேசன் (வயது 17, கனகசபை சுதர்சன் (வயது 16) ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .