2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாவி மீன்பிடி அதிகரிப்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 02 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நிலவி வரும்; காலநிலை மற்றும் அமைதிச்;சூழல் காரணமாக வாவி மீன்பிடித்தொழில் அதிகரித்திருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இம்மாவட்டத்தில் வாவி மீன்பிடித்தொழிலில் 11,750 குடும்பங்கள் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட கடற்றொழில் திணைக்கள பிரதி பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வாகரை, களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி, பிள்ளையாரடி, காத்தான்குடி, வலையிறவு உட்பட பல பிரதேசங்களை சேர்ந்த மீனவர்கள் வாவி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

வாவி மீன்பிடி தொழில் அதிகரித்துள்ளதால் வாவி மீன்களின் விலைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

450முதல் 500 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ வாவி மீன் தற்போது 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனையாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .