2026 மே 04, திங்கட்கிழமை

விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி மரணம்

Kogilavani   / 2013 ஏப்ரல் 02 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹூஸைன

ஏறாவூர், ஆறுமுகத்தான்குடியிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காரைதீவு -7 விஸ்ணு வி;த்தியாலய வீதியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தர்மலிங்கம் (வயது 50) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் வானொன்று மோதியதில் இவ்விபத்து நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய வான் சாரதி கைது செய்யப்பட்;டுள்ளதுடன் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .