2026 மே 04, திங்கட்கிழமை

மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 03 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி கரையோர இறங்குதுறைப் பிரதேசங்களில் மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஏப்ரல் மாத இறுதிக்குள் அமைக்கவுள்ளதாக அந்த  மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை பிரதிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

காத்தான்குடி, பாலமீன்மடு, களுவன்கேணி, கல்லாறு ஆகிய இடங்களில் இந்த மண்ணெண்ணெய் எரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதற்கான எரிபொருளை வழங்குவதற்கான ஒப்பந்தம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .