2026 மே 04, திங்கட்கிழமை

வடக்கில் தமிழ் மக்களின் ஜனநாயக குரல் நசுக்கப்படுகிறது: பொன்.செல்வராசா

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 03 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

வடக்கில் தமிழ் மக்களின் ஜனநாயக குரல் நசுக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே செல்வராசா எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

வடக்கில் தமிழ் மக்களின் ஜனநாயக போராட்டத்தினை குழப்பி அதை வன்முறையாக்கி தமிழ் மக்களின் குரலை நசுக்குவதற்கு முனைகின்றனர். ஜனநாயக வழியில் தமது அரசியல் நடவடிக்கையை மேற்கொள்பவர்களுக்கு இவ்வாறு வன்மறையை பிரோகிப்பதும் அடாவடித்தனங்களை மேற்கொள்வதும் ஒரு தொடர் கதையாகவே நடந்து வருகின்றன' என்று சுட்டிக்காட்டினார்.

'இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று சிறிது காலத்தின் பின்னர் நாம் மறந்து விடுகின்றோம். இந்த சம்பவங்களின் பின்னணியில் அரசாங்கம் இருந்து வருகின்றது என்பதை நாம் அவதானிக்க கூடியதாக உள்ளது.

வன்முறையில் ஈடுபட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்த சிலரை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த போதும் அவர்களுக்கெதிராக பொலிஸார் எந்த சட்ட நடவடிக்கையினையும் எடுக்காமல் இருப்பது அரசாங்கம் இதன் பின்னணியில் இருந்து இந்த வன்முறையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்பட்டு வருகின்றது என்பதை காண முடிகின்றது' என்று அவர் கூறினார்.

'தொடர் கதையாக இருக்கும் இந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்துவதற்கும் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் ஆக்கபூர்வான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். இது விடயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நன்கு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்தோடு பொதுமக்களின் அச்சத்தையும், நம்பிக்கையீனத்தையும் போக்குவதற்கு ஆக்கபூர்வமான அர்த்தபுஸ்டியான நடவடிக்கைக்கு செல்ல வேண்டும்' என செல்வராசா எம்.பி மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .