2026 மே 04, திங்கட்கிழமை

முன்னறிவித்தல் இல்லாத நீர்வெட்டினால் மக்கள் பெரும் அவதி

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 03 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெறும் எவ்வித முன் அறிவித்தல்களுமில்லாத திடீர் நீர்வெட்டு காரணமாக நீர் பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சில தினங்களில் முழுநாளும் அறிவித்தல்களின்றி இவ்வாறு நீர்வெட்டு இடம்பெறுகிறது. சிலவேளைகளில் அதிகாலையிலேயே இவ்வாறு நீர்த்தடை ஏற்படுகின்றது.

காத்தான்குடி பிரதேசத்தில் கிணற்று நீர் அசுத்தமடைந்துள்ளமையால் மிக அதிகமான பொதுமக்கள் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் குழாய் நீரையே நம்பியுள்ளனர்.

இவ்வாறான முன்னறிவித்தலில்லாத செயற்பாட்டினால் அதிகாலையில் பாடசாலைக்கு தயாராகும் மாணவர்கள் முதல் பலவிதமான தேவைகளுக்கும் குடிநீரை பாவிப்பவர்களும் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர். இது குறித்து கூடிய கரிசனை செலுத்துமாறு நீர்பாவனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .