2026 மே 04, திங்கட்கிழமை

மட்டு. இணக்கசபையின் தலைவர் கணேசு காலமானார்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு இணக்க சபையின் தலைவரும் சமாதானத்துக்கான சர்வமத ஒன்றியத்தின் ஸ்தாபகரும் தலைவரும் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவருமான கணபதிப்பிள்ளை கணேசு 71ஆவது வயதில்; காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில்; சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்று புதன்கிழமை காலமானார்.

நீண்டகாலமாக சமூக சேவையில் ஈடுபாடும் அக்கறையும் கொண்டவராகச் செயற்பட்டுவந்த இவர், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் சிரேஷ்ட உறுப்பினரும் ஆலோசகருமாகச் செயற்பட்டவர் ஆவார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .