2026 மே 04, திங்கட்கிழமை

வாகன விபத்தில் மூவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 15 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ரவீந்திரன்    

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பொறுகாமம்  சந்தியில்  இடம்பெற்ற  வாகன  விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

படுவான்கரையைச் சேர்ந்தவர்களே இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை    இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடனொன்று மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள்; உடனடியாக  களுவாஞ்சிக்குடி  ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்  மேலதிக  சிகிச்சைக்காக  மட்டக்களப்பு  போதனா  வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார்  விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .