2025 மே 05, திங்கட்கிழமை

இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டல் பயிற்சிநெறி

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 15 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}



-மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு வாழ்க்கைத்திறன் மற்றும் தொழில் வழிகாட்டல் பயிற்சிநெறிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மட்டக்களப்பு  கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை ஆரம்பான இளைஞர், யுவதிகளுக்கான இந்தப் பயிற்சிநெறி இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்துள்ளது.

வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, கிரான், ஏறாவூர்ப்பற்று, ஏறாவூர் நகர் ஆகிய 6 பிரதேசங்களைச் சேர்ந்த 2,400 இளைஞர், யுவதிகளுக்கு இந்தப் பயிற்சிகள்  வழங்கப்படுகின்றன.

ஐரோப்பிய யூனியன் நிதி அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமும் (யுனிசெப்;;;)  தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து இந்தப் பயிற்சிகளை  நடத்தி வருகின்றன. 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X