2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சர்வோதயத் தலைவர் ஆரியரட்ண - மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா சந்திப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த சர்வோதயத் தலைவர் கலாநிதி ஏ.ரி.ஆரியரட்ணவுக்கும் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையாவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானிலுள்ள சர்வோதய கிழக்கு மாகாண அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, சர்வோதய வேலைத்திட்டம் தொடர்பிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பிலும்  கலந்துரையாடப்பட்டதாக சர்வோதயத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் இ.எல்.ஏ.கரீம் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி, சர்வோதயத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் இ.எல்.ஏ.கரீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி சர்வோதயத் தலைவர் கலாநிதி ஏ.ரி.ஆரியரட்ணவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

சர்வோதயத் தலைவர் கலாநிதி ஏ.ரி.ஆரியரட்ண மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டிருந்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X