2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அதியுயர் மின்கடத்தியை குடியிருப்புக்கள் அற்ற பகுதிக்கு மாற்றுமாறு பிரேரணை

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகர சபைப் பிரிவில் மக்கள் அடர்த்தியான குடியிருப்புக்களுள்ள பகுதிகளுக்கூடாகச் செல்லும் இலங்கை மின்சார சபையின் அதியுயர் மின்வலு சக்தி வாய்ந்த மின் கடத்தியை அகற்றி, குடியிருப்புக்கள் இல்லாத பகுதியினுடாக மின் கடத்தியைக் கொண்டு செல்லும் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகர சபையில் கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா இந்தப் பிரேரணையை முன்வைத்துள்ளார்.

காத்தான்குடி நகர சபைப் பிரிவில் மக்கள் அடர்த்தியான குடியிருப்புக்களுள்ள பகுதிகளுக்கூடாக இலங்கை மின்சார சபையின் அதியுயர் மின்வலு சக்தி வாய்ந்த மின் கடத்தி  செல்கின்றது.

இதனால் பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த அதியுயர் மின்வலு சக்தி வாய்ந்த மின் கடத்தி  செல்லும் பகுதிகளுக்கு கீழே வசிக்கும் குடியிருப்பாளர்கள் இதனால் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடி ரெலிகொம் வீதியில் இந்த அதியுயர் மின்வலு சக்திவாய்ந்த மின் கடத்தி அறுந்து விழுந்து அனர்த்தமொன்று இடம்பெற்றதையும் இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

இவற்றினை கருத்திற்கொண்டு மக்கள்  அடர்த்தியான குடியிருப்புக்களுள்ள பகுதிகளுக்கூடாக அதியுயர் மின்வலு சக்தி வாய்ந்த மின் கடத்தியை அகற்றி காத்தான்குடி கடற்கரை மற்றும் வாவிக்கரையோரம் கொண்டு செல்வதற்கு காத்தான்குடி நகர சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X