2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மரக்கன்றுகள் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


பட்டதாரி பயிலுனர்களால் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்  மேற்கொள்ளப்படும் வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் கீழ், மரக் கன்றுகள் நடும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. 

மண்முனை வடக்கு பிரதேச செயலக அலுவலகத் தோட்டத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு  சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது.

மிளகாய், கத்தரி, தக்காளி, புடோல், கறிமிளகாய் உள்ளிட்டவை இதன்போது நாட்டப்பட்டன.

மண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்தித் தலைவவரும் ஐனாதிபதியின் ஆலோசகரும்  கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் வழிகாட்டலின் கீழ் பிரதேச செயலாளர் கிரிதரனின் ஆலோசனையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத் தோட்டத்திற்கான முதல் கன்றுகளை முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் சிவராஜா,  திவிநெகும இணைப்பாளர் நமசிவாயம் உள்ளிட்டோரும்  நட்டு ஆரம்பித்து வைத்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X