.JPG)
-எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.சசிகுமார், சிவம் பாக்கியநாதன்
மட்டக்களப்பில் பெண்களின் உற்பத்திப் பொருட்களை விற்பணை செய்யும் மகளிர் சந்தையொன்று நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு காவியா பெண்கள் சுய தொழில் அமைப்பினால் இந்த சந்தை ஆரம்பித்து வைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மகளிர் சந்தையினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் திறந்து வைத்தார்.
இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் மற்றும் பிரதேச செயலாளர்களான எம்.தவராஜா, திருமதி கௌரி தினேஸ் மற்றும் மட்டக்களப்பு சமுர்த்தி பிரதி பணிப்பாளர் பி.குணரட்னம், மட்டக்களப்பு காவியா பெண்கள் சுய தொழில் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி யோகமலர் அஜித்குமார், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் வி.ரஞ்சித மூர்த்தி, சுவீடிஸ் கூட்டுறவு நிறுவனத்தின் வதிவிட பணிப்பாளர், சர்வதேச தொழிலாளர் ஸ்த்தாபனத்தின் இணைப்பாளர் எஸ்.சிவப்பிரகாசம் சுவீடிஸ் கூட்டுறவு நிறுவனத்தின் இணைப்பாளர் ரி.மயூரன் உட்பட காவியா நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இப் பெண்கள் சந்தையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களினால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.