2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மண்முனை வடக்குப் பிரதேச சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாணிக்கப்போடி சசிகுமார்


மண்முனை வடக்குப் பிரதேச சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு பொலிஸ் மலைமையக மண்டபத்தில் பிரதேச சிவில் பாதுகாப்புக் குழுத் தலைவர் ஸ்ரீவான் ராஜா தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தல் மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 35 கிராம சேவகர் பிரிவிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் கிராம சேவகர் பிரிவுகளுக்குப் பொறுப்பான பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பிரதேசத்தில் பொலிஸாருடன் இணைந்து சினேகபூர்வமாக மக்களுக்கு ஆற்றவேண்டிய சேவைகள், டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் என பல்வேறு விடயங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிஞ்சிலி குணசேகர மற்றும் போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.ஹிதாயத்துல்லா ஆகியோர் கலந்துகொண்டு சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .