2025 மே 05, திங்கட்கிழமை

விசேட தேவையுடைய சிறுவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வு

Super User   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

விசேட தேவையுடைய சிறுவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வொன்று மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு வண்ணத்துப் பூச்சிகள் சமாதான பூங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், வர்ணம் தீட்டுதல் மற்றும் கோலம் போடல் போன்ற பொழுதுபோக்கு நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஓக்டோபர் 1ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்;த நிகழ்வுகளில் சிறப்பு நிகழ்வாக சிறுவர்களை மகிழ்விக்க கனடாவைச் சேர்ந்த சிறுவர் கதை சொல்பவரான நோர்மன் பெரின் மற்றும்  வண்ணத்துப் பூச்சிகள் சமாதான பூங்கா நிறுவன ஸ்தாபகர்களில் ஒருவரான போல் ஹோகன் இருவரும் கலந்துகொண்டு கதை கூறி சிறுவர்களை மகிழ்வித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X