2025 மே 05, திங்கட்கிழமை

திவிநெகும பயணாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் திவிநெகும திட்டத்தின் மூலம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வறுமையான குடும்பங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திவிநெகும பயணாளி குடும்பங்களுக்கு திங்கட்கிழமை (30) கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன.

இதில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.கருணாகரன், காத்தான்குடி கால்நடை சுகாதார உற்பத்தி அலுவலகத்தின் பொறுப்பதிகாரி டாக்டர் திருமதி எஸ்.சகலசூரிய, காத்தான்குடி பிரதேச செயலக திவிநெகும திட்டத்திற்கு பொறுப்பான முகாமைத்துவ உதவியாளர் ஜே.லிங்கேஸ்வரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.முபஸ்ஸீர் உட்பட கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம உததியோகத்தர் பிரிவிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட 41 பயணாளிகளுக்கு 10 கோழிக்குஞ்சுகள் வீதம் வழங்கப்பட்டன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X