2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பொதுநலவாய மாநாட்டு ஜனாதிபதி செயலணிக்குழு மட்டக்களப்புக்கு விஜயம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கான ஜனாதிபதி செயலணிக்குழு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (2) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்செய்தனர்.

செயலணிக்குழுவின் தலைவி டினூசி அய்ஸா தலைமையிலான குழுவினரே இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்து மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியனுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதேவேளை, இக்குழவினர் மாவட்டத்தில் நடைபெறும் அபிவிருத்திப்பணிகளையும் நேரில்சென்று பார்வையிட்டனர்.

பொதுநலவாய மாநாட்டிற்கு வருகைதரும் உலகத்தலைவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதால் அதற்கு முன்னோடியாக இம்மாவட்டத்தில் நடைபெறும் அபிவிருத்தி பணிகளை பார்வையிடுவதே இவர்களது விஜயத்தின் நோக்கமென திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .