2025 மே 05, திங்கட்கிழமை

மக்களின் பிரச்சினைகளை அரசியல்வாதிகளிடம் முன்வைப்பது தொடர்பில் தீர்மானம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

'மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்றாடம் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களின் தேவைகள் குறித்து கிராமங்களில் பணியாற்றும் சிவில் சமுக அமைப்புக்களினூடாக மாதாந்தம் நடைபெறும் மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் அரசியல்வாதிகளிடத்திலும் அதிகாரிகள் மட்டத்திலும் முன்வைக்கப்படவேண்டும்' என்று மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரச சார்பற்ற ஒன்றியங்களின் கூட்டமைப்பான இணையம் ஒன்று கூடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட இணையத்தின் தவைலவர் கே.கமலதாஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை (1) மாலை மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற ஒன்று கூடலில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், மட்டக்ளப்பு மாவட்ட சிவில் இராணுவ இணைப்பதிகாரி மேஜர் எஸ்.ஹெட்டிகொட பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மாவட்டத்தின் கிராமப்புறங்களில் செயற்படும் 31 உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும்; இதில் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X