2025 மே 05, திங்கட்கிழமை

வெருகல் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


திருகோணலை மாவட்டம், வெருகல் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை வெருகல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

புத்தசாசன மதவிகாரங்களுக்கான பிரதியமைச்சரும் வெருகல் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான ஏ.டி.எஸ்.குணவர்தன தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பிரதேச செயலாளர் பி.தனேஸ்வரன், பிரதேச வைத்தியர் பாக்கியதுரை வடிவுக்கரசி, கூட்டுத்தாபன, திணைக்களங்களின் தலைவர்கள்,  முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர், கடந்தகால ஆயுத வன்முறைகளால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட வெருகல் பிரதேசம் தற்பொழுது அபிவிருத்தியை நோக்கி மீண்டெழுவதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

இருப்பினும் இன்னும் சகல தரப்பாரினதும் ஒத்துழைப்புடனும் அபிவிருத்தியைத் துரிதமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவை உள்ளது எனவும் அவை கவனத்திலெடுக்கப்பட வேண்டும் என்பதையும் பிரதியமைச்சர் குணவர்தன வலியுறுத்தினார்.
தற்சமயம் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திகளின் முன்னேற்றம் குறித்தும் பின்னடைவுகள் குறித்தும் சம்பந்தப்பட்ட தரப்பினரோடு விரிவாக ஆராயப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத் திட்டங்கள் குறித்தும் அதிக அக்கறையுடன் ஆராயப்பட்டது.

இவை தவிர கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களிடமிருந்தும் பிரதியமைச்சர் குணவர்தன குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

அபிவிருத்தி திட்டங்கள் அமுலாக்கப்படும்போது பொதுமக்களின் கரிசனைகளையும் கவனத்தில் எடுக்குமாறு பிரதியமைச்சர் குணவர்தன அதிகாரிகளைப் பணித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X