2025 மே 05, திங்கட்கிழமை

'தேனகம்' சஞ்சிகை வெளியீடு தொடர்பில் கலந்துரையாடல்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் 'தேனகம்' சஞ்சிகையை இந்த ஆண்டும் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு, கொலட் வீதியில் உள்ள பேராசிரியர் சி.மௌனகுருவின் அரங்க ஆய்வுகூடத்தில் செவ்வாய்க்கிழமை (1) இடம்பெற்றது.

மண்முனை வடக்கு கலாசார பேரவையின் ஆலோசகரும் முன்னாள் பேராசிரியருமான சி.மௌனகுரு தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் எழுத்தாளரும் கலாசார பேரவையின் உறுப்பினருமான மைக்கல் கொலின் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

'நினைவுப்பந்தல்' என்னும் தலைப்பில் வெளிவரவுள்ள இந்த நூல், 1940 ஆம் ஆண்டு தொடக்கம் 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்த தெரிந்தெடுக்கப்பட்ட முதியவர்கள் தொடர்பில் பதியும் மலராக வெளிவரவுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X