2025 மே 05, திங்கட்கிழமை

உலக குடியிருப்பு தினம்; மட்டக்களப்பில் பல்வேறு வேலைத்திட்டங்கள்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட அலுலகத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் 7ஆம் திகதி உலக குடியிருப்பு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் உலக குடியிருப்பு தினம் தொடர்பான கருத்தரங்கு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உயர்தர வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், இந்தக் கருத்தரங்கில் கிழக்குப் பல்கலைக்கழக புவியல்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் இராஜரெட்னம் கிருபாகரன், கிழக்குப் பல்கலைக்கழக புவியல்த்துறை  விரிவுரையாளர் எம்.வசத்தகுமாரி, பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் கி.லோகராஜா ஆகியோர் விரிவுரைகளை நடத்தினர்.

இந்தக் கருத்தரங்கில் 'மட்டக்களப்பு நகரம்  மாறிவரும் கட்டமைப்புக்களும் பாதுகாப்பான வாழ்விடத்திற்கு சவாலாகும் அனர்த்தங்களும்', 'அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் நகரங்கள், தற்கால போக்குகளும் நிலையான அபிவிருத்திக்கான சவால்களும்', 'நகராக்கமும் சூழலும்' ஆகிய தலைப்புக்களில் விரிவுரைகள் நடத்தப்பட்டன.

இந்தக் கருத்தரங்கில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவி முகாமையாளர் ஜி.நிமல்ராஜ் உட்பட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X